×

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா: ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு?

விஜயவாடா: ஆந்திராவின் காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த பதவியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுடன், இந்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், ஆந்திர மாநில காங்கிரசில் மாற்றங்கள் துவங்கியுள்ளன. இந்த மாற்றங்கள் காரணமாக, ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி (APCC) தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார்.

இதன் பிறகு இந்தப் பதவிக்கு சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸில் இணைந்த ஒய்.எஸ். ஷர்மிளா நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிடுகு ருத்ர ராஜு தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடந்த வாரமே அனுப்பியுள்ளார். இருப்பினும் அந்த கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்ததையடுத்து, அக்கட்சி அவரிடம் மாநில பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு ஷர்மிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டால், இது ஒரு திருப்பமாக பார்க்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஷர்மிளா ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை (ஒய்எஸ்ஆர்டிபி) ஷர்மிளா ஜனவரி 4 ஆம் தேதி காங்கிரஸுடன் இணைத்தார்.

The post ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா: ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு? appeared first on Dinakaran.

Tags : AP STATE CONGRESS ,Y. S. ,Sharmila ,Vijayawada ,Andhra ,Congress ,Kitugu Rudra Raju ,Y. ,Congress party ,Lok Sabha ,Assembly ,AP ,Dinakaran ,
× RELATED மோதலை கட்டுப்படுத்த போலீஸ்...